
கௌரவிக்கப் பட்ட அஷ் ஷெய்க் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
-கிண்ணியா நிருபர்-
அகில இலங்கை ஜமாஅத் இஸ்லாமியின் முன்னாள் தலைவர் அஷ் ஷெய்க் ரஷீத் ஹஜ்ஜுல் இந் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் ஆற்றிய சமூக பணிகளை பாராட்டும் முகமாக கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தியினால் ஞாபகச் சின்னம் வழங்கப்பட்டு பாராட்டி, கௌரவிக்கப் பட்டார்.
நேற்று சனிக்கிழமை கிண்ணியா அல் மஸ்ஜிதுல் ஹைர் ஜும்ஆ பள்ளியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்தே இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டது.
தொடர்ந்தும் கிண்ணியா சூறா சபையின் தலைவர் ஏ.ஆர்.எம்.பரீட்டினாலும் அவரது அயராத உழைப்பையும் சேவையையும் பாராட்டி கௌரவிப்பதற்கான நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.
