
GOV PAY மூலம் தண்ட பணம் செலுத்தும் நடைமுறை மட்டக்களப்பில் ஆரம்பம்!
ஐ சி டி எ நிறுவனம், லங்கா பே நிறுவனம் மற்றும் டிஜிடல் பொருளாதார அமைச்சின் அனுசரணையுடன், இலங்கை போக்குவரத்து பொலிஸ் திணைக்களம், நாடளாவிய ரீதியில் நடைமுறைபடுத்தியுள்ள, போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சாரதிகளிடம் அறவிடும் தண்ட பணத்தை ,ஒன்லைன் மூலம் செலுத்தும் கோ பே (gov pay) சிஸ்டம், இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .
இத் திட்டத்தை கிழக்கு மாகாணத்தில் நடைமுறை படுத்தும் செயல்திட்டத்தின், மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட மோட்டார் போக்குவரத்து பிரிவு போக்குவரத்து பொறுப்பு அதிகாரி சரத் சந்திர ஶ்ரீ ஒருங்கிணைப்பில், மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரதீப் கழுபான தலைமையில் இடம்பெற்ற செயலமர்வில், பிரதம அதிதியாக மோட்டார் வாகன போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு பொலிஸ் மா அதிபர் டப்ளியு . பீ. ஜே. சேனா தீர மற்றும் மட்டக்களப்பு பிராந்திய பொறுப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் . ஏ .எல் . மொஹமட் ஜெமீல், இலங்கை தொடர்பாடல் தகவல் தொழில்நுட்ப அதிகாரி உதாரி விதானகே, லங்கா பே நிறுவன நிறைவேற்று அதிகாரி அமில ஏக்கநாயக்க, பொலிஸ் தொடர்பாடல் தொழினுட்ப நிலைய பொறுப்பு பிரதம பொலிஸ் அதிகாரி கே. சி. எல். பெரேரா மற்றும் மட்டக்களப்பு பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்,
