சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றம் அதிகரிப்பு
சவூதி அரேபியாவில் இந்த ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுபவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் மாத்திரம் இதுவரை 347 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது 2024ஆம் ஆண்டை விட அதிகமாகும்.
இதேநேரம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சவூதி அரேபியா தனது முந்தைய மரண தண்டனை சாதனைகளை முறியடித்துள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் (சுமார் 66%) போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகவே தண்டிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலோனோர் வெளிநாட்டவர்கள் .
குறிப்பாக எகிப்து, பாகிஸ்தான் மற்றும் ஜோர்தான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் அடங்குவர்.
