நாளை முதல் நாடு முழுவதும் மழை

நாட்டில் நாளை செவ்வாய்க்கிழமை முதல் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன்படி வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

அத்துடன் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கிழக்குப் புற அலையின் செல்வாக்கு காரணமாக, நாடு முழுவதும் மழையுடன் கூடிய நிலைமைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,

மேலும் மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு சுமார் 30 முதல் 40 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் மூடுபனி கலந்த நிலைமைகள் ஏற்பட வாய்ப்புள்ளது