பிரதான மார்க்கத்தில் ரயில் சேவைகள் பாதிப்பு

அலவ்வ ரயில்  நிலையத்துக்கு அருகில் சமிக்ஞை கோளாறு ஏற்பட்டதால், பிரதான ரயில் மார்க்கத்தில் ரயில்  சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சமிக்ஞை கோளாறை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதாக ரயில்வே  திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே, பயணிகள் தங்களது பயணத்துக்கு முன்னர் ரயில் சேவைகள் தொடர்பான தகவல்களைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.