வாகரையில் பேரிடரின் பின் வழமைநிலைக்கு திரும்பும் மக்கள்

வாகரைபிரதேசத்தில் பேரிடரின் பின் மக்கள் வழமை நிலைக்கு திரும்பியுள்ளதை அவதானிக்க முடிக்கிறது.

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையின் காரணமாக பேரிடரினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதனால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் மக்கள் வழமை நிலைக்கு திரும்ப முடியாத நிலையிலும்   தொழில் நடவடிக்கையில் ஈடுபட முடியாத பாரிய சிரமத்தின் மத்தியில் இருந்தனர்.

மேலும்  மக்கள் வழமைக்கு திரும்பியதுடன் போக்குவரத்தும் சீரான நிலையில் வீதிகளில் வாகனங்கள் செல்வதையும், மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதையும் இன்று வியாழக்கிழமை அவதானிக்க முடிகிறது.