
A/L உட்பட அனைத்துப் பரீட்சைகளும் காலவரையறையின்றி ஒத்திவைப்பு!
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் நடைபெறவிருந்த ஏனைய அனைத்துப் பரீட்சைகளும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும். பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்தார்.
மின்சாரத் தடை மற்றும் தொடர்பாடல் சிக்கல்கள் காரணமாகப் பரீட்சைகள் குறித்து வினவி பரீட்சை திணைக்களத்திற்குப் பொதுமக்களிடமிருந்து அதிகளவான தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன.
இதன் காரணமாகவே, பரீட்சை ஒத்திவைப்பு குறித்த இந்தத் தீர்மானத்தை மீண்டும் உத்தியோகபூர்வமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனவே, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இது தொடர்பில் குழப்பமடைய வேண்டாம் எனவும், புதிய திகதிகள் அறிவிக்கப்படும் வரை காத்திருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்
