கொழும்பு – காரைநகர் இடையே புதிய பஸ் இன்று முதல் சேவையில்
சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் காரைநகர் பிரதேச மக்களின் நலனை கருத்திற்கொண்டு 782 வழித்தட பஸ் சேவையில் புதிய இணைப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த சேவை இன்று முதல (24) இலங்கை போக்குவரத்து சபையினால் முன்னெடுக்கப்படுகிறது ..
கொழும்பு – காரைநகர் இடையே போக்குவரத்தில் ஈடுபடும் பஸ் கொழும்பில் இருந்து வந்து அதிகாலை 5.00 மணியளவில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்துக்கு சென்று அங்குள்ள பயணிகளை ஏற்றியவாறு யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தை சென்றடையும் .
பின்னர் அங்கிருந்து 5.50 மணிக்கு வழமை போல் காரைநகர் நோக்கி போக்குவரத்து சேவையில் ஈடுபடும்.
இதேநேரம் பி.ப 6.20 மணிக்கு யாழ் ரயில் நிலையத்துக்கு சென்று அங்குள்ள பயணிகளை ஏற்றியவாறு காரைநகர் நோக்கி போக்குவரத்து சேவையில் ஈடுபடும் என காரைநகர் அரச போக்குவரத்து வீதி முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
