இலங்கையர்களுக்கு ஜப்பானில் அதிக வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை
2026 ஆம் ஆண்டுக்குள் ஜப்பானிய மொழிப் பயிற்சியைப் பூர்த்தி செய்த 5000 இலங்கையர்களைக் கொண்ட குழுவை உருவாக்க எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
ஜப்பானிய வேலை வாய்ப்புகளுக்காக இலங்கையர்களை ஆட்சேர்ப்பு செய்துள்ள நிறுவனங்களின் பிரதானிகள் சிலரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போது பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து அதிகளவான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதும், ஜப்பானிய வேலைவாய்ப்புகளை மேம்படுத்துவதும் இந்த பிரதானிகள் விஜயத்தின் முக்கிய நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
