குஷ் ரக போதைப்பொருளுடன் மூவர் கைது
சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான “குஷ்” ரக போதைப்பொருளுடன், இலங்கைக்கு வந்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து நாட்டை வந்தடைந்த நிலையில், மூவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களிடமிருந்து 4.22 கிலோகிராம் “குஷ்” ரக போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .
