மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் தலைமையில் முக்கோண கிரிக்கெட் சுற்றுத்தொடர்
சிறைச்சாலை முக்கோண கிரிக்கெட் சுற்றுப் தொடர் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் மட்டக்களப்பு பாட்டாலிபுரம் மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது.
மட்டக்களப்பு, பொலன்னறுவை, திருகோணமலை ஆகிய சிறைச்சாலை அதிகாரிகள் குழு பங்கு பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டி, சிறைச்சாலைச் சொந்தங்களிடையே ஒற்றுமையும் உடல் நலனும் ஊக்குவிக்கும் நோக்குடன், மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் ந.பிரபாகரன் மற்றும் சிறைச்சாலை பொழுதுபோக்கு கழகம் மட்டக்களப்பு சிறைச்சாலை ஒருங்கிணைக்கப்பட்டு நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகள் அணி கிண்ணத்தை சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்விற்கான அனுசரணையை மட்டக்களப்பு சிறைச்சாலை பொழுதுபோக்கு கழகம் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது .