குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ண ஆலயத்தில் தீபாவளி விசேட பூஜை வழிபாடுகள்
கிழக்கில் பிரசித்தி பெற்ற குருக்கள் மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தில் தீபாவளி விசேட பூஜை வழிபாடுகள் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது .
கிழக்கில் பிரசித்தி பெற்ற விஷ்ணு ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ண ஆலயத்தில் தீபாவளி விசேட பூஜை வழிபாடுகள் இன்றைய தினம் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சோமேஸ்வரம் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
ஆலயத்தில் கிருஷ்ண பெருமானுக்கு இடம்பெற்ற விசேட அபிசேகத்தை தொடர்ந்து , தீபாவளி விசேட பூஜை வழிபாடுகள் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ நடைபெற்றது.