User Name-ஐ பயன்படுத்தும் அம்சத்தை WhatsApp அறிமுகம் செய்ய உள்ளது
WhatsApp செயலியை உலக அளவில் சுமார் 300 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதன்படி தங்களது பயனர்களுக்குத் தனித்துவமான பயன்பாட்டுத் திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் WhatsApp அறிமுகம் செய்வது வழக்கம்.
அந்தவகையில் Telagram பாணியில் தொலைபேசி இலக்கங்களுக்கு பதிலாக, User Name-ஐ பயன்படுத்தும் அம்சத்தை WhatsApp அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக “User Name” என்ற அம்சம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த அம்சத்தின் மூலம், பயனர்கள் தங்கள் WhatsApp கணக்குடன் ஒரு தனிப்பட்ட பயனர் பெயரை (username) உருவாக்கிக் கொள்ளலாம்.