முல்லைத்தீவில் நூல் வெளியீட்டு நிகழ்வு

முல்லைத்தீவு விசுவமடு மகா வித்தியாலய கணிதப்பிரிவு உயர்தர மாணவன் தவயோகன் தர்சாந் அவர்களின் அறிவியல் சார்ந்த நூலான வெண்வெளி யுத்தம் என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை விசுவமடு மத்தி சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

வண.ரீ.எஸ்.யோசுவா தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக புதுக்குடியிருப்பு
கோட்டக் கல்விப் பணிப்பாளர் .சி.பாஸ்கரன், கலந்து கொண்டார்.சிறப்பு விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் கேகிதா லிசோ கலந்து கொண்டார்.

நிகழ்வில் நடராசா கருணாகரன், அதிபர். மு/விசுவமடு மகாவித்தியாலயம்.
யோகேஸ்வரன் மகேஸ்வரன், அதிபர்,மு/கோம்பாவில் விக்கினேஸ்வர வித்தியாலயம்.
அன்னலங்கம் சண்முகலிங்கம், மூத்த கலைஞர். சமூகச் செயற்பாட்டாளர்.
தங்கராசா சாளினி (நிலாமகள்), படைப்பாளர், திருகோணமலை.
றயூலா திருச்செல்வன். இணைப்பாளர் (நூலகர்) திறன்விருத்தி நிலையம், விசுவமடு மத்தியசனசமூக நிலையம்.
பிரதேச மூத்த படைப்பாளர்
கலாபூஷணம் .நடராசா இராமநாதன், பன்முக எழுத்தாளரும் அறிவிப்பாளரும், சிவசுப்பிரமணியம் ,பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் ,எழுத்தாளர்கள், பிரதேச பொது அமைப்பு சார்ந்தோர், பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.