‘எமது குடும்பம் பிரச்சினைகளால் தத்தளிக்கின்றது’ வடக்கில் போராட்டத்தில் குதித்த சிங்கள மொழி மூல ஆசிரியர்கள்!

கம்பஹாவில் கணவன், வவுனியாவில் மனைவி, பிள்ளைகள் நடு வீதியில், எமது குடும்பம் பிரச்சினைகளால் தத்தளிக்கின்றது என வடக்கு மாகாணத்தில் சிங்கள் மொழி மூல கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

வடக்கின் ஆளுநரும் தமக்கான தீர்வை வழங்க பின்னடிக்கின்றார் என , வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் சிங்கள் மொழி மூல கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கொழும்பு, ஹம்பகா, காலி, களுத்துறை என பல வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 40 இற்கும் அதிகமான வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் சிங்கள் மொழி மூல கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் தமது இடமாற்றம் தொடர்பில் கரிசனை செலுத்துமாறு வடக்கின் ஆளுநரிடம் இன்றையதினம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இற்றிலையில் குறித்த ஆசிரியர்களிடன் கலந்துரையாடிய ஆளுநர் வெற்றிடங்களுக்கு ஏற்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டு ஜனவரி மாதத்துக்குள் தீர்வை வழங்குவதாக தெரிவித்தார்

குறித்த ஆசிரியர்கள் வடக்கின் கல்வி அமைச்சின் செயலாளர் அலுவலகம் சென்று அங்கும் தமது பிரச்சினைகளை கூறி கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.