சேருநுவர பொலிஸ் நிலையத்தில் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையும் பரிசோதனையும்

-மூதூர் நிருபர்-

திருகோணமலை -சேருநுவர பொலிஸ் நிலையத்தில் பொலிஸாரின் அணிவகுப்பும் மரியாதையும் ,பரிசோதனையும் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.

இவ் அணிவகுப்பு பரிசோதனையில் சேருநுவர, ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலையங்களை சேர்ந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் ,பொலிஸ் உயரதிகாரிகள் பொலிஸார் கலந்து கொண்டனர்.இதன்போது பொலிஸ் வாகனங்களும் பரிசோதனை செய்யப்பட்டன.

கந்தளாய் பிராந்தி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சஜ்ஜீவ பண்டார கலந்து கொண்டு அணிவகுப்பை ஏற்றுக் கொண்டு பரிசோதனை நடவடிக்கையிலும் ஈடுபட்டார்.