-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தில் 4ம் நாளான நேற்று வியாழக்கிழமை மாலை முப்பெருந்தேவி உற்சவம் இடம்பெற்றது.
வீரத்தைத் தரும் தெய்வமாகிய துர்க்காதேவியுடன் செல்வத்தை தரும் இலக்குமியும் கல்வியைத் தரும் சரஸ்வதியுடன் சண்டேஸ்வரியும் உள்வீதி, வெளிவீதி எழுந்தருளி அடியார்களுக்கு அருள் புரிந்தனர்.
இதேவேளை குறித்த தெய்வங்களைப் போல் சிறுவர்கள் வேடமிட்டு வீதியுலா வந்தமை குறிப்பிடத்தக்கது.