மட்டக்களப்பு தலைமை பொலிஸ் பிரிவில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆதரவற்ற நிலையில், கல்வியினை தொடர முடியாமல், வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற பிள்ளைகளின் கல்வி மேம்படுத்தும் வகையில், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருன ஜயசுந்தரவின் ஆலோசனையின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள, “சரோஜா ” மக்கள் பாதுகாப்பு எனும் வேலை திட்டத்தின் ஊடாக, மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார ஏற்பாட்டில், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது

மட்டக்களப்பு தலைமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களின் தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

நன்கொடையாளர் ஒருவரின் நிதி அனுசரணையில், தெரிவு செய்யப்பட்ட 42 பாடசாலை மாணவர்களுக்கு இந்த கற்றல் உபகரணங்கள் வாங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நுவான் மெண்டிஸ், மாவட்ட சிரேஸ்ட  பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன மற்றும் பொலிஸ் அதிகாரிகள், மாணவர்களின் பெற்றோர்கள், பொலிஸ் உத்தியோத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.