நுவரெலியா மாநகரசபையின் ஏற்பாட்டில் “கிளீன் நுவரெலியா” வேலைத்திட்டம்
-நுவரெலியா நிருபர்–
நுவரெலியா மாநகர சபை எல்லைக்குட்பட்ட மூன்பிளேன் தோட்டத்தில் “கிளீன் நுவரெலியா” புதிய வேலைத்திட்டதின் கீழ் நேற்று துப்பரவு செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளன.
இதில் சூழலுக்கு பங்கம் விளைவிக்கும் குப்பை கூலங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உரிய முறைப்படி அகற்றப்பட்டது.
நுவரெலியா மாநகரசபையின் தோட்ட உட்கட்டமைப்பு குழுவின் ஏற்பாட்டில் சுகாதார பரிசோதகர்கள் மேற்பார்வையின் கீழ் மாநகசபை ஊழியர்கள் இணைந்தும் தோட்ட பொது மக்களின் பங்களிப்புடன் ‘கிளீன் நுவரெலியா’ வேலை திட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த பகுதிகளுக்கு நுவரெலியா மாநகர சபையின் பிரதி முதல்வர் சட்டத்தரணி சிவன்ஜோதி யோகராஜா மற்றும் மாநகர உறுப்பினர் குமரவேல் நவநீதன் உள்ளிட்டோர் பலர் பிரசன்னமாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா மாநகரசபையின் தோட்ட உட்கட்டமைப்பு என்ற குழுவின் ஏற்பாட்டில் தொடர்ந்து பல்வேறுபட்ட தூய்மைப்படுத்தும் நோக்குடன் புதிய வேலைத்திட்டங்கள் தோட்டப்புறங்களை மையமாக கொண்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.