முல்லைத்தீவில் உயிரிழந்த இளைஞருக்காக நிர்வாக முடக்கம் செய்ய அழைப்பு விடுக்கும் சாணக்கியன் மட்டக்களப்பு மக்களின் பிரச்சினைகளுக்காக நிர்வாகமுடக்க போராட்டம் செய்ததில்லை என கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தனபாலன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியினால் எதிர்வரும் திங்கட்கிழமை முன்னெடுப்படவுள்ள வடக்கு கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு வாழைச்சேனை கிழக்கு ஊடக மன்றத்தின் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்ப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் அறுவடைக்காக காத்திருக்கும் இந்த நேரத்தில் நெல் கொள்வனவு செய்ய விடாது கடையடைப்பு நடத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை இலங்கை தமிழரசுக்கட்சி அழிப்பதாக அவர் குற்றம் சுமத்தினார்.