யாழில் பேருந்து உரிமையாளரின் கொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் புங்குடுதீவு தனியார் போக்குவரத்து சங்கத்தினர் இன்றையதினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்பு கொடியை பறக்கவிட்டு, பதாதைகளை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 10 ஆம் திகதி, தனது வீட்டில் இருந்தவேளை வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட, 776 வழித்தட பேரூந்து உரிமையாளரான  ஐயாத்துரை அற்புதராசா(அகிலன்) என்பவரின் கொலைக்கு நீதிவேண்டியும், கொலையாளிகளை விரைந்து கைது செய்யக்கோரியும் இந்த போராட்டம் சுமார் இரண்டு மணிநேரம் இடம்பெற்றது.

இதனால் புங்குடுதீவு – யாழ்பாணம் இடையேயான போக்குவரத்து சேவைகள் இன்றையதினம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது