மட்டக்களப்பு குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சமுத்திர திருக்குளிர்த்தி

மட்டக்களப்பு குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சமுத்திர திருக்குளிர்த்தி இன்றைய தினம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகிய இப்பெருவிழாவில் தொடர்ந்து பத்து நாட்கள் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதை தொடர்ந்து ,இன்றைய தினம் காலை விநாயகர் பானை எழுந்தருளல் இடம்பெற்றதை தொடர்ந்து , சில முத்துமாரி அம்பாள் கிராம ஊர்வலமாக சமுத்திர திருக்குளிர்த்திக்காக புறப்பட்டார்.

பின் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ , ஆனிப்பூரணையில் சித்தயோகத்துடன் கூடிய சுப முகிர்த்த வேளையில் சமுத்திர திருக்குளிர்த்தி சடங்கு வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஆலய சடங்குற்வம் யாவும் ஆலய பிரதம குரு, சிவ ஸ்ரீ நவரத்ன முரசொலி மாறன் குருக்கள் மற்றும் சிவகரன் குருக்கள் ஆகியோரினால் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

கிழக்கிலங்கையில் மழை வரம், குழந்தை வரம் , செல்ல வளம் , என்பவற்றை வேண்டி மேற்கொள்ளப்படும் சடங்குற்சவமாக இது பார்க்கப்படுகின்றது.