மட்டக்களப்பு-கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தீ

மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தீ மிதிப்பானது இன்று வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்றது.

அதிகாலை பூசையை தொடர்ந்து தவநிலை இடம்பெற்று தீ மிதிப்பு இடம்பெற்றது.

இதன்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பிரதேசங்களில் இருந்து கலந்து கொண்டனர்.

இன்று மாலை விநாயகப்பானை வைக்கப்பட்டு இரவு திருக்குளிர்த்தி பாடப்பட்டு நாளை அதிகாலை கடற்கரையில் கும்பம் சொரியப்பட்டு திருக்கதவு அடைக்கப்படும்.