
கடந்த காலங்களில் மட்டக்களப்பில், ஒரு முக்கிய கட்சியில் வேட்பாளராக களமிறங்கி மக்களிடம் வாக்கு கேட்ட ஒருவர், ரியல் எஸ்டேட் என்ற பெயரில், மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் காணிகளை அபகரிப்பு செய்வதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தாங்கள் தடுத்தும் கூட அதை மீறி இவர்கள் இவ்வாறு காணிகளை அபகரிக்கிறார்கள் என்றால், இதன் பின்னால் அரசியல் தலையீடு இருப்பதாக தாங்கள் சந்தேகிப்பதாக, சத்துருக்கொண்டான் பிரதேச கிராம அபிவிருத்தி சங்கத்தின் பொருளாளர் தெரிவித்துள்ளார்.
