குளவிக்கொட்டுக்கு இலக்காகிய 13 பேர் வைத்தியசாலையில்
கண்டி – புஸ்ஸல்லாவை, போமண்ட் தோட்டத்தில், சிறுவர்கள் உள்ளிட்ட 13 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
குறித்த பகுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, வீடு திரும்பும் போதே, அவர்கள் இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர்.
இந்தநிலையில், குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்கள் அனைவரும், கம்பளை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில், 07 பெண்கள் அடங்களாக 17 முதல் 70 வயதுக்குட்பட்ட 09 பேரும், 06 முதல் 14 வயது உட்பட்ட 04 சிறார்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.