மூதூர் -கட்டைபறிச்சான் தொழிற்பயிற்சி நிலையத்தில் சிரமதானப் பணிகள்

-மூதூர் நிருபர்-

கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மூன்றாம் நிலை தொழிற்பயிற்சி நிலையங்களில் இன்று வெள்ளிக்கிழமை தேசிய ரீதியில் சிரமதானப் பணிகள் இடம்பெற்றது.

அதன் அடிப்படையில் மூதூர் -கட்டைபறிச்சான் தொழிற்பயிற்சி நிலையத்திலும், இன்று காலை சிரமதானப் பணி இடம்பெற்றது.அத்தோடு தொழில் பயிற்சி நிலையமானது வர்ணங்கள் பூசப்பட்டு அழகுபடுத்தப்பட்டது.தொழில் பயிற்சி நிலையத்தின் உள், வெளிப்பகுதிகளுக்கு தூய்மைப்படுத்தப்பட்டன.

சிரமதானப் பணியில் தொழில் பயிற்சி நிலைய மாணவர்கள், நிருவாகத்தினரும் ஈடுபட்டனர்.

இவ் தேசிய வேலைத் திட்ட நிகழ்வில் மூதுர் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.பிரகலதன்,பிரதேச சபை உறுப்பினர்,ஜெயமாலா,மூதூர் வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள்,மூதூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் அதிதிகளாக கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.