மட்டக்களப்பு – செங்கலடியில் அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிப்பு
மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் மிகவும் வறிய குடும்பம் ஒன்றிற்கு உதவும் நோக்கில் செங்கலடி மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களின் வோண்டுகோளுக்கு அமைய ஏழைக்கு குடும்பத்தின் நிலமையை கடந்த ஒரு மாதத்தின் முன் நேரில் சென்று பார்வையிட்ட லண்டன் ஈழப்பதீஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் அவர்களின் ஏழ்மையின் நிலமையை அறிந்து வீட்டை அமைத்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த வீடானது சுமார் 20 இலட்சம் ரூபா செலவில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
“ஒப்புரவு இல்லம்” என்ற பெயரில் அமைக்கப்பட்ட குறித்த வீட்டை பயனாளியிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.
மட்.செங்கலடி மத்திய கல்லூரியின் அதிபர் க.சுவர்ணேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வீட்டினை திறந்து வைத்ததுடன் , லண்டன் ஈழப்பதீஸ்வரர் ஆலய நிர்வாக மட்டக்களப்பு இணைப்பாளர்களான நா.ஆனந்தராசா மற்றும் லோ.அனோஜன் , சமூக சேவையாளர் சுபாஸ்சந்திரநாதன் ஆகியோருடன் செங்கலடி மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயலாளர் , மோகன் டிலான் மற்றும் 2013உயர்தர பழைய மாணவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
பயனாளிகளிடம் வீடு உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டதுடன், வீட்டுற்குத் தேவையான தளபாட உபகரணங்களும் வழங்கப்பட்டிருந்தன.
இதேவேளை செங்கலடி மத்திய கல்லூரியின் 2013உயர்தர பழைய மாணவர்களினால் தமது பிரிவினுள் சேகரிக்கப்பட்ட நிதியில் இருந்து வீட்டு மதில் அமைப்பதற்கான அடிக்கல்லும் இன்று வைக்கப்பட்டது.