கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 இலங்கையர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு விமான நிலைய சுங்க அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் 20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள விஸ்கி மற்றும் சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வந்து குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரும் யட்டியந்தோட்டை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ஒருவருமே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 10 சூட்கேஸ்களில் 116,200 வெளிநாட்டுத் தயாரிப்பு மென்செஸ்டர் சிகரெட்டுகள் மற்றும் 117 போத்தல் விஸ்கி ஆகியவற்றை மறைத்து வைத்திருந்ததாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இரு சந்தேக நபர்களையும் தடுத்து வைத்து, விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.