முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்தி செயலமர்வு

-மூதூர் நிருபர்-

“முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்தி செயற்பாடு” செயலமர்வு மூதூர் – கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது.

முன்பள்ளி கல்வி அபிவிருத்தி, முன்பள்ளி சுகாதார அபிவிருத்தி எனும் தொணிப் பொருளின்கீழ் இவ் செயலமர்வு இடம்பெற்றது.

கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் அமைப்பின் தங்கேஸ்வரன் அனுஷா குடும்பத்தின் அனுசரணையில் மூதூர் பிரதேச சுழலும் சக்கர நாற்காழி சங்கத் தலைவியுமான விஜிதா மணிமாறன் ஏற்பாட்டில் இச்செயலமர்வு இடம்பெற்றது.

இதன்போது முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆளுமையை விருத்தி செய்தல், பிள்ளைகளுக்கு அன்போடு கற்பித்தல், பாகுபாடு காட்டாமல் முன்பள்ளி கற்பித்தலை மேற்கொள்ளல்,புதிய விடயங்களுக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் தயாராகுதல்,பிள்ளைகளின் நல்ல விடயங்களை பாராட்டுதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக விரிவுரை வழங்கப்பட்டது.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான இச்செயலமர்வுக்கு முன்பள்ளிகளுக்கான திருகோணமலை மாவட்ட பணிப்பாளர் எஸ்.மஜுன் ,மூதூர் வலயக் கல்விப் கல்வி பணிப்பாளர் , மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் அதிகாரிகள் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

  • Beta

Beta feature