துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் பலி
இரத்தினபுரி – கஹவத்தையின் யைன்னா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
கொஸ்கெல்லா பகுதியில் உள்ள வீட்டிற்கு நேற்று திங்கட்கிழமை இரவு அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் சென்று, அந்த வீட்டில் இருந்து இரண்டு இளைஞர்களைக் கடத்திச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதன்போது 22 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் 27 வயதுடைய இளைஞன் சிகிச்சைக்காக கஹவத்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை, மேலும் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சம்பவம் குறித்து கஹவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.