யாழில் 19 வயது இளைஞன் கசிப்புடன் கைது
-யாழ் நிருபர்-
யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 19 வயதுடைய இளைஞர் 25 லீற்றர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளான்.
சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.