பிரபல நடிகை ஷெஃபாலி திடீர் மரணம்

இந்தி நடிகையும் மற்றும் இந்தி பிக் பாஸ் 13 சீசனின் பிரபலமுமான ஷெஃபாலி ஜரிவாலா (வயது – 42) திடீரென நேற்று வெள்ளிக்கிழமை உயிர் இழந்துள்ளார்.

ஷெஃபாலி ஜரிவாலாவுக்கு நேற்று இரவு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரது கணவர் மும்பையில் உள்ள வைத்தியசாலைக்கு அவரை கொண்டு சென்றிருக்கிறார்.

ஆனால், அங்கே அவரைப் பரிசோதித்து பார்த்த வைத்தியர்கள், ஷெஃபாலி ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், நடிகை ஷெஃபாலி மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.