பாரவூர்தி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி

எல்ல – வெல்லவாய வீதியில் பாரவூர்தி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் பண்டாரவளை பகுதியை சேர்ந்த 34 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தின் போது பாரவூர்தியின் ஓட்டுநர் வெளியில் துாக்கி வீசப்பட்டதில் இவர் பாரவூர்தியின் அடியில் சிக்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.