காட்டு யானைகள் அட்டகாசம்

திருகோணமலை, தோப்பூர் – செல்வநகர் கிராமத்திற்குள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் பயன்தரும் தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளன.

இதன்போது 10 தென்னை மரங்கள் காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

ஊருக்குள் வந்து காட்டு யானைகள் இவ்வாறு சேதம் விளைவித்துள்ளமையால் மக்களும் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை காணப்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

காட்டு யானைகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தோப்பூர் – செல்வநகர் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.