மலையக ரயில் சேவை பாதிப்பு
பதுளை – தெமோதர மற்றும் எல்ல ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையில் இன்று வெள்ளிக்கிழமை பைன் மரங்கள் விழுந்ததால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி ரயில் ஒன்று இன்று காலை பயணத்தைத் தொடங்கிய நிலையில் குறித்த பகுதியினூடாக செல்லும் போது ரயிலின் சாரதி மரங்கள் விழுந்து கிடப்பதை தூரத்திலிருந்து அவதானித்து ரயிலை நிறுத்தியதன் மூலம் பெரும் விபத்தைத் தடுத்துள்ளதாக ரயில் பயணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எல்ல பைன் வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய பைன் மரங்கள் விழுந்ததால் ரயில் பாதை தடைப்பட்டுள்ளதுடன் குறித்த மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.