கடலுக்கு சென்ற மீனவர் கரை திரும்பவில்லை: தேடுதல் பணி தீவிரம்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, மணல்காடு பகுதியில் இருந்து இன்று வியாழக்கிழமை அதிகாலை கட்டுமரத்தில் கடற்றொழிலிற்கு சென்ற தொழிலாளி ஒருவர் இதுவரை கரை சேரவில்லை.

ஆனதாஸ் (வயது – 38) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தொழிலுக்கு சென்ற நிலையில் கரை திரும்பவில்லை

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த மீனவர் இன்று அதிகாலை  மீன் பிடி தொழிலுக்காக சென்றுள்ளார். வழமையாக 9 மணியளவில் கரைசேரும் இவர் இதுவரை திரும்பி வராத நிலையில் உறவினர்கள் படகில் தேடிச் சென்றவேளை, அவர் பயணித்த கட்டுமரமானது கடலில் மிதந்து வந்துள்ளது.

கடலட்டை தொழிலில் ஈடுபடும் படகு மோதியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மணல்காடு மீனவர்கள் தற்போது தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்‌.