இலங்கை இராணுவத்தின் 67ஆவது தலைமைத் தளபதி நியமனம்

இலங்கை பொறியியலாளர்கள் படை பிரிவு மேஜர் ஜெனரல் கபில டோலகே, இன்று வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவத்தின் 67ஆவது தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பதிவியில் பணியாற்றிய மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க ஓய்வு பெற்றதையடுத்து இவருக்கு இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.