-மூதூர் நிருபர்-
திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 92ஆம் கட்டைப் பகுதியில் இன்று அதிகாலை பார ஊர்தி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலையிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த குறித்த பாரஊர்தி, அதிகாலை 5 மணியளவில் கந்தளாய் – கண்டி பிரதான வீதியின் 92ஆம் கட்டைப் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது ஓட்டுனர் மாத்திரம் பயணித்துள்ளதுடன் தூக்க கலக்கம் காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் .
விபத்தில் சாரதிக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், சம்பவத்தின் விளைவாக ஸ்ரீலங்கா டெலிக்கொம் இணையத் தொலைத்தொடர்பு வயர்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
மேலும் சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.