-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி குடமுருட்டி பாலத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை அதிகாலை வேகக்கட்டுப்பாட்டை இழந்த எரிபொருள் பெளசர் தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.
முத்துராஜவெலவிலிருந்து காங்கேசன் துறை நோக்கி பூநகரி வீதியால் பயணித்துக்கொண்டிருந்த எரிபொருள் பெளசர் வண்டியே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதுடன் பெருமளவான டீசல் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.