நண்பருக்கு மனைவியை விருந்தாக்கிய கணவர்
இந்தியாவின், மத்தியப் பிரதேசத்தில் தனது கணவர், நண்பரிடம் வாங்கிய 50,000 ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தன்னை அவருக்கு விற்றதாக, பெண்ணொருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டில், தனது கணவரின் சூதாட்டப் பழக்கத்தால் அவரது கடன் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
அதிகளவிலான கடனால், பணம் கொடுத்த தனது நண்பருக்கு, கணவர் தன்னை விற்றதாகவும், அவருடன் தகாத உறவைப் பேணுமாறு கட்டாயப்படுத்தியதாகவும், குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய முறைப்பாட்டளரின் கணவரும், அவரது நண்பரும் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களைத் தேடி வருவதாக மத்திய பிரதேச காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.