குளவி கொட்டியதில் 50 மாணவர் பாதிப்பு
ஹம்பாந்தோட்டையில் அறநெறிப் பாடசாலையைச் சேர்ந்த 50 மாணவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை குளவி கொட்டுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மித்தெனிய பகுதியில் உள்ள விஹாரையில் நடத்தப்படும் அறநெறி பாடசாலைக்குச் சென்றவர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.
விஹாரையில் அமைந்துள்ள பிரதான சாலையின் அருகே அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைக்கு அருகில் உள்ள கம்பத்தில் கட்டப்பட்டிருந்த குளவி கூட்டில் அறநெறிப் பள்ளியின் மாணவர் ஒருவர் வீசிய கல்லால் குளவிகள் கலைந்து மாணவர்களை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
குளவிகளால் தாக்கப்பட்ட மாணவர்கள் சிகிச்சைக்காக மித்தெனிய, கட்டுவன, காரியதித்த மற்றும் எம்பிலிப்பிட்டிய மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.