வெப்பக் காற்று பலூன் தீப்பிடித்து விபத்து: 8 பேர் பலி

பிரேசிலின் பிரபல சுற்றுலாத் தலமான கிராண்டேயில் வெப்பக் காற்று பலூன் விபத்தில் சிக்கியதில் 8 பேர் உயிர் இழந்துள்ளனர்.

21 பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த வெப்பக் காற்று பலூன் தீப்பிடித்து எரிந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில், 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 13 பேர் பலத்த காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.