ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள டிரம்ப்

ஈரான் சமாதானத்துக்கு உடன்படாவிட்டால், அதன் மீதான எதிர்காலத் தாக்குதல்கள் இன்னும் கடுமையானதாக இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரானின் 3 முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அவர் கூறுகிறார்.

மேலும், இன்னும் அதிகமான இலக்குகள் எஞ்சியுள்ளதாகவும் தேவையேற்படின் விரைவாக தாக்குதல் நடத்தப்படலாம் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.