மன்னார் நகர சபையினுள் குழப்பம்!

-மன்னார் நிருபர்-

மன்னார் நகர சபையினுல் புகுந்து நபர் ஒருவர், தகாத வார்த்தைகளில் அரச உத்தியோகஸ்தர் ஒருவருடன் முரண்பட்டதுடன் அச்சுறுத்தலும் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் நகரசபை எல்லைக்குள் இயங்கி வரும் தனியார் உற்பத்தி நிறுவனத்தின் உற்பத்தி பொருள் லேபில் தொடர்பில் காணப்பட்ட குறைபாடு தொடர்பில், வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை ஒன்றை மன்னார் நகரசபை சுகாதார பரிசோதகர் மேற்கொண்ட நிலையில், குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் மன்னார் நகரசபை அலுவலகத்தினுல் புகுந்து, அநாகரிகமாக நடந்து கொண்டதுடன் குறித்த சுகாதார பரிசோதகரையும் அச்சுறுத்தும் விதமாகவும் நடந்து கொண்டுள்ளார்.

குறித்த நபருக்கு எதிராக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் நகரசபைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட சகோதர இனத்தை சேர்ந்த சுகாதார பரிசோதகர்,  மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் இணைந்து, அண்மைகாலமாக சுகாதார சீர்கோடுகளுடன் இயங்கி வந்த பல்வேறு உணவகங்கள் மற்றும் நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்ற நிலையில் குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.