யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்-

யாழில் நேற்று வியாழக்கிழமை 160 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுதுமலை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொ.பா.விஜயராஜா தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.