விபத்தில் சமூக செயற்பாட்டாளர் பலி
-மூதூர் நிருபர்-
திருகோணமலை – நிலாவெளி பகுதியில் நேற்று புதன் கிழமை இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் ஒருவர் உயிர் இழந்ததுடன் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.
முச்சக்கர வண்டியில் பயணித்த திரியாய் பகுதியை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் மாணிக்கநடராசா என்பவரே உயிர் இழந்ததுடன் அவரது மனைவி பலத்த காயங்களுக்கு உள்ளாகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சடலம் தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.