மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த கணவன்

மொனராகலை – மெதகம பொலிஸ் பிரிவின் பலகஸ்சார பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை குடும்ப தகராறு காரணமாக கணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மனைவி உயிரிழந்துள்ளார்.

மெகதம மக்கெந்தவின்ன பகுதியை சேர்ந்த 38 வயதுடைய பெண்ணே இதன் போது உயிர் இழந்துள்ளார.

பலகஸ்சார வீதிக்கு அருகில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக மெதகம பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, பொலிஸ் அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்குச் சென்று அந்தப் பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்த போதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் நடத்தப்பட்டுள்ளது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் மெதகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேக நபரைக் கைது செய்ய மெதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.