ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர்கள் சத்திய பிரமாணம்
-கிரான் நிருபர்-
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் உள்ள தமிழீழ விடுதலை இயக்க பணிமனையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய மற்றும் பட்டியல் ஆசனங்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களே இவ்வாறு சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
ஜனநாய தமிழ் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சட்டத்தரணி தேவராசா தவசேகரன் (ரமணன்) முன்னிலையில் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மூதூர், திருகோணமலை மாநகரசபை, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை ஆகிய பகுதிகளில் ஐனநாயக தமிழ்தேசிய கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு வெற்றிபெற்ற போட்டியாளர்கள் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டு சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
சத்தியப்பிரமாண நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினர்கள், போட்டி பெற்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.