இந்திய – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்

யாழ் – காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையே பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் கப்பல் சேவையானது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவையின் இலங்கைக்கான இயக்குனர் திரு.சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.

அசாதாரண காலநிலை காரணமாக கப்பல் சேவையானது இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த கப்பல் சேவையானது எதிர்வரும் புதன்கிழமை தொடக்கம் மீண்டும் சேவையில் ஈடுபடும் என அவர் மேலும் தெரிவித்தார்.