வறுமை கோட்டின் கீழ் வசிக்கும் குடும்பத்திற்கான வீட்டுக்கு அடிக்கல் வைக்கும் நிகழ்வு

-கிரான் நிருபர்-

மட்டக்களப்பு – கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீராவோடை தமிழ் கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் வீடு தேவையுடைய குடும்பம் ஒன்றுக்கு மனிதாபிமான உதவி திட்டத்தின் ஒர் அங்கமாக வீட்டினை கட்டி கொடுக்க பிரதேச சபை உறுப்பினர் முன்வந்துள்ளார்.

கிழிந்த தகரத்தினால் அடைக்கப்பட்ட குடிசையின் கீழ் மழை மற்றும் வெயில் காலங்களில் வசிக்க முடியாத ஆனால் வசித்து வரும் வீட்டு தேவையுடய குடும்பத்திற்கு கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தனபாலன் நிர்மலன் மற்றும் அவர்களின் குடும்பத்தினரினால் வீட்டுக்கான கல் வைத்து ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிட தக்கது.

7 இலட்சம் பெறுமதியான வீட்டிற்கான அடிக்கல்லே நடப்பட்டுள்ளது.